BREAKING NEWS
latest

Kerala News - Arab Tamil Daily - The 24×7 Gulf News

Latest Kerala News News, Articles, Kerala News Images, Videos, Full-Time GCC Arabic News in Tamil, Film, Entertainment, Politics, and Sports Updates from Arab Tamil Daily.

Friday, February 9, 2024

குவைத்திலுள்ள பெரும்பாலான குடிமக்களின் மனதில் வெளிநாட்டினருக்கு உயர்ந்த இடம் உள்ளது என்பதற்கு இந்த கட்டுரையே சான்று

குவைத்தில் உள்ள வெளிநாட்டினரை தனது கட்டுரை மூலம் முன்னிலைப்படுத்திய குடிமகனான சமூக பார்வையாளர் ஆதில் அவர்கள்

Image : டாக்டர் ஆதில் ஃபஹத் அல் மிஷால்

குவைத்திலுள்ள பெரும்பாலான குடிமக்களின் மனதில் வெளிநாட்டினருக்கு உயர்ந்த இடம் உள்ளது என்பதற்கு இந்த கட்டுரையே சான்று

குவைத்தில் பல வருடங்கள் கழித்து வெளிநாட்டவர்களுக்கு குடும்ப விசா வழங்க துவங்கியுள்ளதன் மூலம் அரசின் இந்த முடிவை பலரும் பாராட்டி வருகின்றனர். அவர்களில் முக்கிய ஒருவர் குவைத் குடிமகனான கட்டுரையாளர் மற்றும் சமூக பார்வையாளர் டாக்டர் ஆதில் ஃபஹத் அல் மிஷால் ஆவார். இது தொடர்பாக தினசரி நாளிதழில் அவர் வெளியிட்ட ஒரு நெகிழ்ச்சியான குறிப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒன்றுமில்லாத பாலைவனத்தை தற்போது நாம் பார்க்கிற இந்த அழகான தோற்றத்திற்கு மாறுவதற்கு பின்னால் நமது விருந்தினராக இருக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பங்கை என்றும் மறக்கக்கூடாது என்று தன் கட்டுரையைத் தொடங்குகிறார்.

தன்னுடைய உயிரிலும் மேலான சொந்தங்களை நாட்டில் விட்டுவிட்டு தங்களுடைய குடும்ப சூழல் காரணமாக அண்ணம் தேடி நம் நாட்டுக்கு வந்த அரேபியர்களானவர்கள் மற்றும் அரபிகள் அல்லாத வெளிநாட்டினர் அவர்களின் மகிழ்ச்சி மற்றும் துக்கங்களை குவைத்திகளான நமக்காக மாற்றி வைத்த தியாகிகள் ஆவார்கள். நாம் வசிக்கும் வீடுகள், வாகனங்களை ஓட்டும் சாலைகள், பாலங்கள் எல்லாம் வெளிநாட்டினரின் கடின உழைப்பின் பலன் என்பதை யாரும் மறந்துவிடாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதனால் தான், எங்களைப் போலவே, வேலை முடிந்ததும் வீட்டுக்கு தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டு வாழ்வது வெளிநாட்டினரான அவர்ளுக்கு உரிமை மற்றும் இதற்கான வழியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது குடிமக்களான நமது பொறுப்பு இருக்கிறது. ஆனால் இதை நினைவில் கொள்ளாமல் விஷயங்களை தவறாக மதிப்பிடும் குடிமக்களும் உள்ளனர் என்பதையும் டாக்டர் அடில் தெளிவு படுத்துகிறார்.

வெளிநாட்டினர் தங்கள் குடும்பங்களை அழைத்து அனுமதி வழங்கியது உடல் ரீதியாக மட்டுமல்லாமல் அது அவர்களுக்கு சமூக ரீதியாகவும் மன ரீதியாகவும் புத்துணர்ச்சி அளிக்கும். அவர்கள் நாட்டுக்காகச் செய்யும் சேவைகளில் இதை பலனை குடிமகனான நாம் பார்த்தால் தெரியும். மேலும் வெளிநாட்டினர் அதிகளவில் குடும்ப விசா போன்றவற்றில் நாட்டிற்க்கு வருவது வணிக ரீதியாகவும், கட்டுமான துறையிலும் , சுற்றுலாத் துறையிலும் சிறப்பான வளர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல அடுக்குமாடி குடியிருப்புகள் வசிக்க ஆட்கள் இல்லாமல் தலை நிமிர்ந்து நிற்கின்றன.அவற்றில் பல பெரும் பொருட்செலவில் கட்டப்பட்டது வருத்தமளிக்கிறது.

தற்போது பேச்சிலர் பட்டதாரிகள் தங்கள் நாட்டிலுள்ள குடும்பத்தினரை அழைத்து வந்ததும் குடியிருப்புகளுக்கு மாறி செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும் எனவும், இது இந்த துறையின் வளர்ச்சிக்கு உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .மேலும் அரசின் தாராள மனப்பான்மை, நாட்டில் உள்ள தனியார் கல்வித்துறைக்கும் பலன் தரும். எனவே, அரசின் புதிய முடிவு வெளிநாட்டவர்களுக்கும் பலன் தருவது போல் குவைத்துக்கும் பயன் தரும் என்று நீண்ட பட்டியலிட்டு முனைவர் ஆதில் ஃபஹத் அல் மிஷாலின் கட்டுரை முடிகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Visa | Family Visa | Visit Visa

Add your comments to Kerala News

Thursday, June 10, 2021

குடும்பத்தினருக்கு பயந்து காதல் மனைவியை 10 வருடங்களாக யாருடைய கண்ணிலும் படாமல் தங்க வைத்த கணவர்

குடும்பத்தினருக்கு பயந்து காதல் மனைவியை தன்னுடைய வீட்டில் 10 வருடங்களாக யாருடைய கண்ணிலும் படாமல் தங்க வைத்த கணவர் அதிர்ச்சியும் சுவாரஸ்யமான சம்பவமும் நடந்துள்ளது

Image credit:தம்பதிகள் மற்றும் மனைவி

குடும்பத்தினருக்கு பயந்து காதல் மனைவியை 10 வருடங்களாக யாருடைய கண்ணிலும் படாமல் தங்க வைத்த கணவர்

நம்மால் ஒருவரை ஒரு வீட்டில் யாருக்குமே தெரியாமல் எ‌த்தனை நாட்கள் தங்கவைக்க முடியும். ஒரு சில நாட்களில் எப்படியும் வீட்டில் உள்ளவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள். ஆனால் கேரளா மாநிலம் பாலக்காடு,நென்மாற,ஆயலூர் பகுதியை சேர்ந்தவர் ரகுமான் இவருடைய காதல் மனைவியான சஜிதாவை தன்னுடைய குடும்பத்தினருக்கு பயந்து 10 வருடங்களாக யாருடைய கண்ணிலும் படாமல் அதே வீட்டில் தங்க வைத்த அதிர்ச்சியும் சுவாரஸ்யமான சம்பவமும் நடந்துள்ளது. இருவரும் வெவ்வேறான மதங்களை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இது குறித்த தகவல் நேற்று முதல் வெளியான நிலையில் இன்று அவர்கள் இருவரும் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் சஜிதா தனது பக்கத்து வீடு என்பதால் தன்னுடைய அக்கா மற்றும் குழந்தைகள் வீட்டில் உள்ளதால் அடிக்கடி வருவாள் எனவும் இதனால் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது எனவும், இது யாருக்கும் தெரியாது எனவும்,பின்னர் சேர்ந்து வாழ முடிவு செய்த நிலையில் யாருக்கும் தெரியாமல் ஒரு கோவிலில் வைத்து தாலி காட்டினேன் எனவும் பின்னர் அவள் அவளுடைய வீட்டிற்க்கு சென்றாள் எனவும் தெரிவித்தார்.

Image : பெண்மணி தங்கியிருந்த அறை

பின்னர் சஜிதாவின் வீட்டில் பையனை பார்க்க துவங்கிய போது அதற்குமேல் தன்னுடைய வீட்டில் நிற்க முடியாது என்று கூறவே,ஒருநாள் ரகுமான் யாருக்கும் தெரியாமல் தன்னுடைய வீட்டில் உள்ள அவர் தங்கியிருந்த அறையில் கொண்டுவந்து தங்க வைத்தார். மேலும் கழிவறை இல்லாத காரணத்தால் இரவு நேரங்களில் வெளியே சென்று குளிப்பது மற்றும் கழிவறை செல்வது உள்ளிட்ட அன்றாட கடன்களை செய்தார். ரகுமான் தன்னுடைய அறையில் யாரும் நுழையாத வண்ணம் பிரத்யேகமான பூண்டை பயன்படுத்தினார். மேலும் அத்தியாவசிய தேவைக்கு யாரும் பார்க்காமல் வெளியே செல்லும் விதத்தில் தன்னுடைய அறையின் ஜன்னல்கள் வடிவமைக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

தன்னுடைய வீட்டில் தனக்கு வழங்குகின்ற உணவை இருவரும் பகிர்ந்து சாப்பிட்டு வந்தனர். தற்போது கொரோனா பரவல் காரணமாக தன்னுடைய வீட்டில் தொடர்ந்து தங்க முடியாத நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு மற்றொரு வீட்டை எடுத்த ரகுமான் யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக புதுவிட்டிற்கு அழைத்து சென்றார். இதற்கிடையே கடந்த 3 மாதங்களாக தம்பியை காணாத ரகுமானின் அண்ணன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்து கண்டுபிடிக்க முயற்சி செய்தும் கண்டுபிடிக்க முடியாம‌ல் போனது. இதற்கிடையே சஜிதா மாயமான வழக்கும் கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. சஜிதாவின் பெற்றோர் அவள் இறந்து விட்டதாக கருதினர்.

ஆனால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சாலையில் செல்லும்போது ரகுமானின் அண்ணன் அவரை அடையாளம் கண்டார். சாலையில் கொரோனா காரணமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளிடம் இது குறித்து தெரிவித்தார். தொடர்ந்து ரகுமானை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தபோது உண்மை தெரியவந்தது. இதன் காரணமாக இவர்களின் தலைமறைவு வாழ்க்கை வெளியுலகுக்கு தெரிய வந்தது என்றார். இதன் காரணமாக தாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் மற்றவர்களை போன்று தாங்களும் எந்த பிரச்சனையும் இன்றி வெளிப்படையாக வாழமுடியும் என்று தெரிவித்தார். அதுபோல் இருவரும் தங்கள் இருவரின் மத நம்பிக்கையின் அடிப்படையிலேயே மீதியுள்ள வாழ்கையும் மகிழ்ச்சியாக வாழ முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.இருவரும் திருமணம் செய்யும் நேரத்தில் சஜிதாவுக்கு 18-வயது மற்றும் ரகுமானுக்கு-23 வயதும் இருந்தது. தற்போது இந்த தம்பதிக்கு 28 மற்றும் 33 வயது ஆகிறது.

Add your comments to Kerala News

Tuesday, May 18, 2021

150 முறை இரத்த தானம் செய்து;முன்மாதிரியாக திகழ்ந்த இந்தியர் உயிரிழந்தார்

தன்னுடைய வாழ்நாளில் 150 முறை இரத்த தானம் செய்து;உலகிற்கு முன்மாதிரியாக திகழ்ந்த இந்தியர் கொரோனா காரணமாக உயிரிழந்தார்

Image : உயிரிழந்த பைஜு

150 முறை இரத்த தானம் செய்து;முன்மாதிரியாக திகழ்ந்த இந்தியர் உயிரிழந்தார்

தன்னுடைய வாழ்நாளில் 150 முறை இரத்த தானம் செய்து உலகிற்கு முன்மாதிரியாக விளங்கிய இந்தியா,கேரளா மாநிலம்,திருவனந்தபுரம் நெல்லிமூடு நகரைச் சேர்ந்த பைஜு என்ற நபர் கோவிட் பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்தார். அவர் கடந்த சில நாட்களாக ஒரு தனியார் மருத்துவமனையில் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். நெல்லிமூடில் தொழிலதிபராக இருந்த பைஜு, பல்கலைக்கழக கல்லூரியில் மாணவராக இருந்தபோது காயமடைந்தவர்களுக்கு இரத்த தானம் செய்ய முடிவு செய்தார். முதல் கட்டத்தில், அவர் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் இரத்த தானம் செய்வார், ஆனால் பின்னர் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் இரத்த தானம் செய்து வந்தார். சர்வதேச இரத்ததான தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இரத்த தான முகாமில் இரத்த தானம் செய்து 150-வது முறையாக இரத்ததானம் செய்தார் என்ற சாதனையை நிறைவு செய்திருந்தார். கோவிட் பரவலின் முதல் கட்டத்தில் கேரளா மாநிலம் முழுவதும் உள்ள பலருக்கு இரத்த தானம் செய்ய பைஜு ஒரு முன்மாதிரியாக நிகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add your comments to Kerala News

Thursday, May 6, 2021

கேரளாவில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் தமிழகத்தில் நுழைய பிரச்சனை இருக்காது

கேரளாவில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் தமிழகத்தில் நுழைய பிரச்சனை இருக்காது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது

Image : TVM AIRPORT

கேரளாவில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் தமிழகத்தில் நுழைய பிரச்சனை இருக்காது

கேரளாவில் மே-8 முதல் 16-ஆம் தேதி வரையில் முழுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து வருகின்ற நபர்களுக்கான பயணங்களில் குழப்பங்கள் நிலவிவந்த நிலையில், தற்போது கேரளா அரசு ஊரடங்கு காலத்தில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் அடங்கிய பட்டியலை இன்று(06/05/21) வெளியிட்டுள்ளது.அதில் விமான மற்றும் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய விதிமுறையின்படி,விமான நிலையம் மற்றும் நீண்டதூர ரயில் பயணங்கள் மூலம் ரயில் நிலையங்களில் வந்திறங்கும் மற்றும் புறப்படும் பயணிகள்,பயணச்சீட்டு உள்ளிட்ட Validity ஆவணங்கள் கண்டிப்பாக கைவசம் வைத்திருந்தால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஆன்லைன் டாக்ஸிகள் மூலம் தங்கள் இலக்குகளை அடைய முடியும். எனவே திருவனந்தபுரம் உள்ளிட்ட விமான நிலையங்களில் வந்திறங்கி தமிழகத்திற்கு செல்லும் பயணிகளுக்கு, ஊரடங்கு நேரத்தில் தாயகம் திரும்ப பிரச்சனை இருக்காது என்பது தெளிவாகியுள்ளது. அதே நேரத்தில் எல்லையினை கடந்து தமிழகத்தில் நுழைய தமிழக அரசு அறிவித்துள்ள E-pass கண்டிப்பாக கைவசம் இருக்க வேண்டும். அதுபோல் விமான நிலையத்திலிருந்து தமிழக எல்லையினை அடையும் வரையில் இடையில் எங்கும் இறங்க அனுமதி இல்லை.

Add your comments to Kerala News

Thursday, February 25, 2021

பி.சி.ஆர் எதிர்மறை முடிவு இல்லாமல் எங்கள் வீட்டு வாசலில் ஓட்டு கேட்க வர வேண்டாம்;பதிலடி கொடுக்கும் வெளிநாட்டினர்

பி.சி.ஆர் எதிர்மறை முடிவு இல்லாமல் எங்கள் வீட்டு வாசலில் ஓட்டு கேட்க வர வேண்டாம்; கடும் கோபத்தின் வெளிப்படையாக பதிலடி கொடுக்கும் வெளிநாட்டினர்

Image : Indian Airport

பி.சி.ஆர் எதிர்மறை முடிவு இல்லாமல் எங்கள் வீட்டு வாசலில் ஓட்டு கேட்க வர வேண்டாம்;பதிலடி கொடுக்கும் வெளிநாட்டினர்

வளைகுடாவில் இருந்து வேலை இழந்து நிர்க்கதியாக தாயகம் திரும்புகின்ற இந்தியர்கள் தாங்கள் வேலை செய்யும் வளைகுடாவில் இருந்து எடுக்கப்பட்ட பி.சி.ஆர் எதிர்மறை பரிசோதனை சான்றிதழுடன் நாட்டிற்கு சென்றால் அங்கும் மீண்டும் பி.சி.ஆர் சோதனை மற்றும் மூலக்கூறு சோதனை செய்ய வேண்டும் என்று கடந்த 23/02/21 புதிய உத்தரவு வெளியாகி இதற்காக பெரும்தொகை வசூலிக்கும் நிலையில் இந்தியர்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதற்கு எதிராக குரல் கொடுக்க தயங்கும் அரசியல்வாதிகளுக்கு கேரளா மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வரவிருக்கும் தேர்தலில் வாக்குகள் கேட்க தங்கள் வீடுகளுக்கு வரும்போது அரசியல்வாதிகள் 72 மணிநேரத்தில் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை சான்றிதழ் கையில் எடுத்து ஓட்டு கேட்பதற்காக வீட்டின் வாசலை மிதித்தால் போதும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக சமூக ஊடகங்களில் வெளிநாட்டினர் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

தங்கள் தேவைக்காக மட்டும் வெளிநாட்டினரை பயன்படுத்தி கொள்ளும் அரசியல்வாதிகள் வெளிநாட்டவர்களுக்கு ஒரு பிரச்சினை வரும்போது பேச தயங்குகின்றனர் என்றும் இந்த விஷயத்தில் தலையிடவில்லை என்று வெளிநாட்டவர்கள் கோபத்தில் உள்ளனர். உண்மை என்னவென்றால், வெளிநாட்டினரின் தற்போதைய அவல நிலையை நிவர்த்தி செய்ய மிகச் சில அரசியல்வாதிகள் எடுத்த முயற்சிகளும் பலனளிக்காத நிலையில் இந்த புதிய முடிவுக்கு மத்திய,மாநில அரசும் மற்றும் எதிர்க்கட்சியும் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுவதை நிறுத்திவிட்டு இந்த பிரச்சினையில் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் பிரச்சினை தீர்க்க முயற்சி செய்தால் அது ஆயிரக்கணக்கான சாதாரண வெளிநாட்டவர்களுக்கு பெரிய ஆசீர்வாதமாக இருக்கும் என்றும் பாதிக்கப்பட்ட வெளிநாட்டினர் தங்கள் வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர்.

Add your comments to Kerala News

Monday, February 1, 2021

கரிபூரில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த விமான விபத்தில் உயிரிழந்த குழந்தைக்கு 1.51 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

கரிபூரில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த விமான விபத்தில் உயிரிழந்த குழந்தைக்கு 1.51 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு; இதை விபத்தில் குழந்தையின் தந்தையும் உயிரிழந்தார்

Image credit: crash Air India Flight 1344

கரிபூரில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த விமான விபத்தில் உயிரிழந்த குழந்தைக்கு 1.51 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

கேரளா மாநிலம் கோழிக்கோடு அடுத்த கரிபூரில் கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி நடந்த எதிர்பாராத விமான விபத்தில் விமானி உட்பட 21 பேர் உயிரிழந்தனர் மற்றும் 169 பேர் காயங்களுடன் உயிர் பிழைத்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த 2-வயது சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.1.51 கோடி இழப்பீடு வழங்குவதாக நேஷனல் ஏவியேஷன் கம்பெனி ஆஃப் இந்தியா லிமிடெட் இன்று அறிவித்துள்ளது. குழந்தையின் தந்தையும் இந்த விபத்தில் உயிரிழந்தார்.இறந்த குழந்தை கோழிக்கோடு குன்நமங்கலத்தைச் சேர்ந்த ஷராபுதீன் மற்றும் அவரது மனைவி அமீனா ஆகியோரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொகையை உடனடியாக குடும்பத்தினருக்கு வழங்க உயர்நீதிமன்ற நீதிபதி நகரேஷ் உத்தரவிட்டார். இருப்பினும், விபத்தில் இறந்த ஷராபுதீன் மற்றும் காயமடைந்த அமீனா ஆகியோருக்கு இழப்பீடு வழங்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.இந்த தொகையை தீர்மானிக்க போதுமான ஆவணங்கள் கிடைக்கவில்லை என்று விமான நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதற்கான கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட நிறுவனம் குடும்பத்தினரை அறிவித்தனர்.

Add your comments to Kerala News

Saturday, January 9, 2021

உலகின் முதல் 100 சிறந்த நகரங்களின் பட்டியலில் குவைத்சிட்டி மிகவும் பின்தங்கி உள்ளது


Best City Organisation நடத்திய ஆய்வில் உலகின் மிகவும் பின்தங்கிய 15 நகரங்களில் குவைத் நகரம் ஒன்றாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குவைத்சிட்டி உலகளவில் 86 வது இடத்திலும், வளைகுடா நாடுகள் பட்டியலில் 6 வது இடத்திலும் உள்ளது. துபாய் உலகின் ஆறாவது சிறந்த நகரமாகவும், அபுதாபி 15-வது நகரமாகவும் உள்ளது.

மேலும் வளைகுடா நகரங்களின் பட்டியலை பொறுத்தவரை துபாய் முதலிடத்திலும், அபுதாபி இரண்டாவது மற்றும் தோஹா மூன்றாமிடத்திலும் உள்ளன. ரியாத் வளைகுடாவின் நான்காவது பெரிய நகரமாகும், அதைத் தொடர்ந்து மஸ்கட் ஐந்தாம் இடத்திலும் உள்ளது.பல அடிப்படையாக அளவுகோல்களின் அடிப்படையில் சிறந்த நகரங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. காலநிலை, பாதுகாப்பு, சுற்றுலா தலங்கள், பொது பூங்காக்கள் மற்றும் மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆகியவை இதில் அடங்கும்.

குவைத் கோடையில் வெப்பமான நகரங்களில் ஒன்றாகும், மேலும் நீர் கோபுரங்கள் அதன் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும் என்று அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது. லண்டன், நியூயார்க், பாரிஸ், மாஸ்கோ, டோக்கியோ, துபாய், சிங்கப்பூர், பார்சிலோனா மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் மாட்ரிட் ஆகியவை உலகின் முதல் 10 சிறந்த நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

Add your comments to Kerala News

Tuesday, January 5, 2021

ஓமானில் புதிய மரபணு மாற்ற கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது


ஓமானுக்கு சமீபத்தில் யு.கேயில் இருந்து திரும்பிய ஒரு நபருக்கு சில நாட்களுக்கு பிறகு புதிய மரபணு மாற்ற கொரோனா வைரஸ்  ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளதாக ஓமான் அறிவித்தது. சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாதிக்கப்பட்ட நபரின் சிகிச்சைக்காக அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட நபர் யு.கேயில் இருந்து நாட்டில் வருவதற்கும் எடுக்கப்பட்ட COVID-19 பரிசோதனையில் பாதிப்பு எதிர்மறையானவை, என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நாட்டில் பாதிக்கப்பட்ட மொத்த COVID-19 வழக்குகள் எண்ணிக்கை 129,774 ஐ எட்டியுள்ளன, அதே நேரத்தில் குணமடைந்த நபர்களின் எண்ணிக்கை 122,406 ஆக உள்ளது, இது பாதிக்கப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கையில் 94.3 சதவீதம் உள்ளது. நாட்டில் COVID-19 தொடர்பான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 1,502 ஆக இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 12 வழக்குகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது, மேலும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 70 ஆக உள்ளது, அவர்களில் 26 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ஐ.சி.யூ) உள்ளனர் என்றும் அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.


Oman Report | First Mutant | COVID-19 Strain

Add your comments to Kerala News

Wednesday, December 23, 2020

குவைத்தில் மரபணு மாற்றம் ஏற்பட்ட கோவிட் வைரஸ் அறிகுறி எதுவும் இதுவரை பதிவாகவில்லை

Dec-23,2020

குவைத்தில் மரபணு மாற்றம் ஏற்பட்ட கோவிட் வைரஸ் நாட்டில் இதுவரை பதிவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் புதிய கோவிட் யாரையும் பாதித்ததாக அல்லது குவைத்துக்குள் நுழைந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். இதன் மூலம் நாட்டின் சுகாதார நிலை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது என்பது தெளிவாகிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் உலக சுகாதார அமைப்பு மற்றும் லண்டனில் உள்ள குவைத் தூதரகத்தின் சுகாதார பிரிவு அலுவலகத்தில் இருந்து புதிய கோவிட் வைரஸ் ஏற்படுத்தும் சவால்கள் குறித்து விரிவான அறிக்கைக்காக குவைத் சுகாதரத்துறை மற்றும் அமைச்சரவை காத்திருப்பதாக அதிகாரிகள் மேலும் தெரிவி்த்துள்ளனர்.

அதிகாரிகள் மேலும் கூறுகையில் இந்த புதிய கொரோனா பிரச்சினை தொடர்பான சுகாதாரத்துறை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், உலக சுகாதார அமைப்பு மற்றும் லண்டனில் உள்ள குவைத் தூதரகத்தின் சுகாதார பிரிவு வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்பட்டும் என்றும் அவர்கள் கூறினார்கள்.

இதுபோல் சவுதி சுகாதாரத்துறையும் மரபணு மாற்றம் ஏற்பட்ட புதிய கோவிட் வைரஸ் அறிகுறி எதுவும் இதுவரை பதிவாகவில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.


Add your comments to Kerala News

Tuesday, December 22, 2020

குவைத்தின் Rumaithiya சாலையில் சென்ற இந்தியர் திடிரென கீழே விழுந்து உயிரிழந்தார்

Dec-22,2020

குவைத்தின் Rumaithiya பகுதியில் குடிபோதையில்  சாலையில் நடந்து கொண்டிருந்தபோது இந்தியர்
ஒருவர் கீழே விழுந்து இறந்தார் என்று தினசரி செய்தி வெளியிட்டுள்ளது.

நேரில் பார்த்த சாட்சிகளில் ஒருவர் கூறுகையில் சாலையில் நடந்து செல்லும்போது ஒருவர்
திடிரென கீழே விழுந்தார். தொடர்ந்து அவசரகால பாதுகாப்பு துறை மற்றும் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார் எனவும், ஆனால் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பரிசோதனை செய்ததில் அவர் இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது என்று கூறியுள்ளார்.

பாதுகாப்பு அதிகாரிகள் முதல்கட்ட அறிக்கையில் இறந்த நபரிடம் இருந்து நீரிழிவு நோய் தொடர்பான மருந்துகள் கைப்பற்றியதன் மூலம், இறப்புக்கு அது காரணமாக இருக்கலாம் என்றும், இது தொடர்பான இறுதி அறிக்கை விரையில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

Add your comments to Kerala News

Sunday, December 20, 2020

குவைத்தில் இந்த வருடம் மனித கடத்தல் வழக்குகள்,கணிசமான அதிகரிப்பு அதிகாரி தகவல்: i


Dec-20,2020

குவைத் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் காலித் ஹம்மது அஜ்மி கூறுகையில்,இந்த ஆண்டு மனித கடத்தல் வழக்குகளின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரித்துள்ளது என்றார். பாதிக்கப்படும் மக்கள் தைரியமாக புகார்கள் அளிக்க காரணம்,மனித கடத்தல் மற்றும் அதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிரான குவைத் அரசு எடுத்துள்ள கடினமான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த என்றார். மனித கடத்தல் தொடர்பான 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் மூன்று வழக்குகள் வீதம் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆறு வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். 

மேலும் 2017-ஆம் ஆண்டில் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, 2018-ஆம் ஆண்டில் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இவற்றில் பெரும்பாலான வழக்குகளில் சிக்கிய குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளன என்றார். இதையடுத்து 2020-ஆம் ஆண்டில் இதுவரை 40 பேர் மனித கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

குவைத்தில் சட்டத்திற்கு புறம்பாக விசா வியாபாரம் கடந்த இரண்டு சகாப்தங்களாக நடந்து வருகிறது என்றார். ஆனால் கோவிட் பின்னணியில் தான் நாட்டிற்கு நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் அதன் விளைவுகள் படிப்படியாக தோன்றத் தொடங்கியது எனவும், விசா வர்த்தகம் மூலம் பாதிக்கப்பட்டவர்களால் ஏற்படும் இழப்புகளுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் தொழில் சட்டத்தில் உள்ள சில குறைபாடுகளே நற்பெயரை கெடுக்க காரணம் என்று அவர் கூறினார்.

Add your comments to Kerala News

Monday, December 7, 2020

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு வேலைக்கு சென்ற பெண்ணுக்கு குடும்பத்தினர் செய்த நன்றிக்கடன்:

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு வேலைக்கு சென்ற பெண்ணுக்கு குடும்பத்தினர் செய்த நன்றிக்கடன்:

Dec-7,2020

அவர்களுக்கு கவிதா ஒரு உதவியாளர் மட்டுமல்ல மகள்தான், குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சூரை அடுத்த திரிபிரயார் பகுதியில் ஒரு வீட்டிற்கு வேலைக்கு வந்தவர் கவிதா.

விமானப்படையிலிருந்து ஓய்வு பெற்ற ரசாக் மற்றும் அவரது மனைவி நூர்ஜஹான் ஆகியோருக்கு கவிதா ஒரு மகள். கடந்த பதினான்கு ஆண்டுகளாக, கவிதா இருவரையும் தனது தந்தை மற்றும் தாயாகவே பார்த்திருக்கிறார். தமிழ்நாட்டிலிருந்து கவிதாவின் தந்தையும் தாயும் வருடத்திற்கு ஒரு முறை கவிதையைப் பார்க்க வருவார்கள்.

குடும்ப உறுப்பினரைப் போல இவ்வளவு காலமாக சிறுமியை கவனித்துக் கொண்டிருந்த குடும்பத்தினர், அவள் நினைத்துக்கூட பார்க்காத ஒரு கனவு பரிசை வழங்க தீர்மானித்து திருமண ஏற்பாடுகளை செய்தனர். மேலும் இதை கவிதாவுக்கு செய்ய வேண்டிய ததங்களுடைய கடமை என்று ரசாக் மற்றும்  குடும்பத்தினர் கருதினர். மணமகன் பக்கத்து ஊரைச் சேர்ந்தவர். கொரோனா விதிமுறை அடிப்படையில் எளிதாக இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.

மேலும் ரசாக்கின் குடும்பத்தினர் அவருக்கு(கவிதாவுக்கு) திருமண பரிசாக பன்னிரண்டு சவரன் நகைகளையும், தன்னுடைய வீட்டின் பக்கத்திலேயே நான்கு சென்ட் நிலத்திலும் ஒரு புதிய வீட்டைக்கட்டி அதன் சாவியையும் திருமண நாளில் பரிசாக  வழங்கினார்கள். தொடர்ந்து ரசாக் கூறுகையில் இன்பத்திலும்,துன்பத்திலும் கைபிடித்து உடன்நடக்க ஒரு துணையையும், வீட்டையும் வழங்க முடிந்ததில் மகிழ்ச்சி என்று கூறினார்.  இதுபோல் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கேரளாவில் மற்றொரு தமிழ் பெண்ணுக்கு திருமணம் நடந்த செய்தியை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.




 

Add your comments to Kerala News